டெல்லி: நிதியமைச்சர் தாக்கல் செய்து வரும் மத்திய பட்ஜெட்2023-24ல்,  157 நர்சிங் கல்லூரிகள், தேசிய டிஜிட்டல் நூலகம், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79000 கோடி நிதி, வட்டியில்லா கடன் நீட்டிப்பு, இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம் என்றும், தொழிற்துறையினருக்கான பட்ஜெட் என்றும், இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூபிரிண்டாக இருக்கும்  என்றும் விவசாய கடன் வழங்க ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது உள்பட ”7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன். கூறினார்.

அடுத்த 3 ஆண்டுகளில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79000 கோடி நிதி ஒதுக்கீடு.

மீனவர் நலனுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை உபயோகப்படுத்தும் வகையில் தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்து புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட்டும் என்றும் மருந்து துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள புதிய திட்டம் கொண்டு வரப்படும்.

கர்நாடக மாநிலத்தில் பாசன திட்டங்களுக்கு ரூ.5ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது.

இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது,

‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும் என்றும் கூறினார்.