சென்னை: பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், பிளஸ்2, பிளஸ், 10வதுவகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளது.  தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு மார்ச் 13-ம் தேதி, 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ம் தேதி, 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ம் தேதி  பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது.

இநத் நிலையில், மாணாக்கர்கள்,  தேர்வெழுதும்போது மின் தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்ய மின்வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  மாணவர்கள் தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தேவையான உத்தரவுகளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகள் நடைபெறும் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்சார துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிற நிலையில், மாணவர்கள் தேர்வெழுதும் நேரத்தில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்வு நேரங்களில் வீடுகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.