ஐதராபாத்: தமிழ்நாட்டில், நீலகிரி உட்பட 6 மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயகரமான பகுதி என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

தமிழகத்தின் கோவை மாவட்டம் 36வது இடத்திலும், திண்டுக்கல் மாவட்டம் 41வது இடத்திலும் உள்ளன. கன்னியாகுமரி 43வது இடத்திலும், தேனி மாவட்டம் 59வது இடத்திலும் உள்ளன. திருநெல்வேலி 72வது இடத்திலும், நீலகிரி 85வது இடத்திலும் உள்ளன.

இஸ்ரோவின் கீழ் இயங்கும் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர், நம் நாட்டில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில் நாடு முழுவதும்  147 மாவட்டங்களில்  மண்சரிவு அதாவது நிலச்சரிவு அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் உத்தரகாண்டின் 13 மாவட்டங்கள் நிலச்சரிவு அபாயம் உள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மற்றும் டெஹ்ரி மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத் நகரம் அமைந்துள்ள சாமோலி மாவட்டம் 19வது இடத்தில் உள்ளது.

நிலச்சரிவு ஏற்படும் மாவட்டங்களின் பட்டியலில், தமிழகத்தின் கோவை மாவட்டம் 36வது இடத்திலும், திண்டுக்கல் மாவட்டம் 41வது இடத்திலும் உள்ளன.

மேலும் இந்த பட்டியலில் கன்னியாகுமரி 43வது இடத்திலும், தேனி மாவட்டம் 59வது இடத்திலும் உள்ளன. திருநெல்வேலி 72வது இடத்திலும், நீலகிரி 85வது இடத்திலும் உள்ளன.

இது பற்றிய விரிவான தகவல்களுக்கு, https://www.nrsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.