புதுடெல்லி: மத்திய அரசின் ”ஒரு தகுதி ஒரு ஓய்வூதியம்” (OROP) திட்டத்தால் அதிருப்தி அடைந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ram_kishan
70 வயதான முன்னாள் ராணுவவீரர் ராம் கிஷன் கிரிவால் அரசின் ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து போராடி வந்தார். அவர் இது பற்றி சில நாட்களாக மிகவும் விரக்தி அடைந்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் டெல்லியில் உள்ள ஒரு பூங்காவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். . இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் வீரரின் உடல் ஆர்.எம்.எஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சடலத்தைக் கண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல அங்கு சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி காவல் துறைக்கு இடையூறு செய்வதாக கைது செய்யப்பட்டார்.
முந்தைய செய்தி: ராகுல்காந்தி கைது