ரூ.3000 கோடி: போதை மாத்திரை பறிமுதல்! பாலிவுட் தயாரிப்பாளர் கைது

Must read

டில்லி,
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.3000 கோடி மதிப்புள்ள மாண்ட்ரக்ஸ் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து ரூ.3000 கோடி பெறுமானமுள்ள போதைபொருள் கைப்பற்றப்பட்டது.  இது தொடர்பாக பாலிவுட் தயாரிப்பாளர் சுபாஷ் துதானி கைது செய்யப்பட்டார்.
இது கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்டதை விட மிகப்பெரிய மதிப்பிலான கடத்தல் என்று கூறப்படுகிறது.
smugling1
இதுகுறித்து,  மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை ஆணை யத்தின் தலைவர் நஜீப் ஷா  கூறியதாவது:?
கடந்த மாதம் 28-ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள ‘மருதர் ட்ரிங்க்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில்,  ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் புலனய்வு துறையினர் சோதனை நடத்தினர்.
அங்கு,  ஒரு ரகசிய அறையில் , அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  மாண்ட்ரக்ஸ்  போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதன் தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3000 கோடி ஆகும்.
இந்த போதை மாத்திரையை அதிக  அளவில் எடுத்து கொள்பவர்கள்  கோமா நிலைக்கு செல்லும் அபாயம் உண்டு.
இந்த மாத்திரைகள் அனைத்தும் மொசாம்பிக் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு கடத்தும் நோக்கத்துடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு நஜீப் ஷா தெரிவித்தார்.

More articles

Latest article