ண்டிகர்

ரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வேலையின்மை மிகவும் அதிகரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக நாட்டில் தொடர்ந்து வேலையின்மை அதிகரித்து வருகிறது.    இதில் வாகனத்துறையில் அதிகம் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும்   அனைத்துத் துறைகளிலும் வேலையின்மை அதிகரித்து வருவதே உண்மையாகும்.    நாட்டின் வேலையின்மை குறித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் கணக்கு ஒன்றை எடுத்து அதன் முடிவை வெளியிட்டுள்ளது.    இதில் நாட்டின் மொத்த சராசரி வேலையின்மை 8.4% ஆக இருந்தது

இந்த கணக்கெடுப்பு மாதத்துக்கு சுமார் 43600 குடும்பங்கள் வீதம் நடத்தப்பட்டது.    இவ்வாறு கடந்த 4 மாதங்களில் 1,74,405 குடும்பங்களில் கணக்கெடுப்பு நடந்துள்ளது.   இந்த கணக்கெடுப்பு மொத்த வேலையில் உள்ளோர் எண்ணிக்கையுடன் வேலை இல்லாதோர் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.    இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள முதலீட்டுக் குறைபாடு என கூறப்பட்டுள்ளது.

பெரிய அளவில் முதலீடுகள் இல்லாததால் பல தரமான வேலை வாய்ப்பு வளர்ச்சி பெரிதும் குறைந்துள்ளது.   இந்த கணக்கெடுப்பில் அதிகபட்சமாக அரியானா மாநிலத்தில் வேலை இன்மை உள்ளதாக காணப்படுகிறது.  அம்மாநிலத்தில் வேலை இன்மை 28.7% ஆக அதாவது நாட்டின் சராசரியை விட மூன்று மடங்குக்கு மேல் அதிகமாக உள்ளது.  இதற்கு அடுத்தபடியாக திரிபுரா மாநிலத்தில் 27.9% வும்  இமாச்சலப்பிரதேசத்தில் 19.2% வும் வேலை இன்மை உள்ளது.

அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் பாஜக அரசு இந்த வேலையின்மையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.   அதற்கிணங்க  அரியானா மாநிலத்தில் ஏற்கனவே 50,000க்கும் அதிகமான அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.   பல புதிய தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளதால் தனியார்த் துறையிலும் வேலை வாய்ப்பு அதிகரிக்கலாம் என அந்தக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.