பெங்களூரு:

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இங்கு 6ம் கட்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். பிரச்சாரத்தின் போது நிருபர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதை பாஜக மறந்துவிட வேண்டும். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டால் வாரனாசி தொகுதியில் பிரதமர் மோடியே தோல்வி அடைவார். எதிர்கட்சிகளின் ஒற்றுமை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சென்றுவிட்டால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்.

தற்போது இந்த ஒற்றுமை ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ளது. 3வது அணி அமைய வாய்ப்பில்லை. அரசியல் சூழலில் கசப்புணர்வு இருப்பது இயற்கை. ஆனால் வெறுப்பு இருக்க கூடாது. இதை மாற்றி அமைக்க வேண்டும். 2014 தேர்தலுக்கு பின்னர் மோடிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை பயன்படுத்தி மோடி நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை’’என்றார்.