டில்லி:

பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக இருந்த பிரபல ஐபிஎஸ் அதிகாரி ராம்மோகன் காலமானார்.

எல்லை பாதுகாப்பு படை முன்னாள் இயக்குனரும், ஐபிஎஸ் அதிகாரியுமான இ.என்.ராம்மோகன் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 77.

அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களை சேர்ந்த 1965ம் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர் வீட்டில் நடந்த சிறு விபத்தில் விலா எலும்பில் அடிபட்டது. அதோடு இவர் ஏற்கனவே புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணங்களால் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் கேரளாவை சேர்ந்தவர். மேகாலயா காஸி மாவட்ட எஸ்பி.யாக பணிபுரிந்துள்ளார்.

அஸ்ஸாம் காவல் துறை மட்டுமின்றி மத்திய ரிசர்வ் போலீஸ், தேசிய பாதுகாப்பு காவல், இந்திய திபெத் எல்லை காவல் பிரிவுகளிலும் பணியாற்றியவர். அஸ்ஸாம் மட்டுமின்றி நாகாலாந்திலம் பணியாற்றினார். 1997 மற்றும் 2000ம் ஆண்டுகளில் எல்லை பாதுகாப்பு படைக்கு தலைமை தாங்கினார். இவர் பழங்குடி இன மக்களின் நில உரிமைக்கு ஆதரவு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.