மொஹாலி:

ஐபிஎல் 2வது போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் 2வது போட்டி மொஹாலியில் நடைப்பெற்றது. இதில் பஞ்சாப்&டில்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பாவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட்களை இழந்தது.

அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டகாரர் அகர்வால் 7 ரன்களில் வெளியேறினர். தொடர்ந்து யுவராஜ் சிங், லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தது. லோகேஷ் ராகுல் 16 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்களை எடுத்தார். யுவராஜ் சிங்கும் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார்.

முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 18.5 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு லோகேஷ் ராகுலின் அதிவேக அரைசதம் பெரிதும் கைகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.