சென்னை: அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கட்டிட அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் 2018ம் ஆண்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. அதன்படி கட்டிடம் கட்ட விரும்புபவர்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் மாநகராட்சி உரிமம் பெற்ற கட்டிட அளவையர் அளித்த புதிய கட்டிட வரைபடம், நிலத்துக்கான ஆவணங்கள், கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். தமிழகத்தில் அரசு அங்கீகாரம் வாங்காமல் கட்டிடங்கள் கட்டப்படுவதாக பல புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் அது குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதன் படி அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் முத்துசாமி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மேலும் வரைப்பட அனுமதி இல்லாமல் எந்த கட்டிடமும் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது பொறியாளர்களின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் கட்டிடம் கட்ட வரைபட அனுமதி தேவை என்பது பொதுமக்களுக்கு தெரியவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.