சென்னை: தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரமானது அனைவரின் பயன்பாட்டிற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர் கட்டிடம் உள்ளிட்ட 5 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக  மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.  மஞ்சப்பை பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் முக்கிய இடங்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டு வருகிறது.   அந்த இயந்திரத்தில் 10 ரூபாய் செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, உயர் நீதிமன்றத்தில் மஞ்சப்பை திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அரசு வழக்கறிஞர் கட்டிடம் உள்ளிட்ட சுமார் 5 இடங்களில் இந்த தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் அனைவரின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை தமிழ்நாடு அரசு பிளீடர் முத்துக்குமார் பொது பயன்பாட்டுக்காக துவங்கி வைத்தார்.