நியூயார்க்: ஐக்கியநாடுகள் சபை முதல் முறையாக தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் அவ்வமைப்பின் தலைமை அலுவலகம் தீபாவளிக்காக போடப்பட்ட வண்ண விளக்குகளால் மின்னிக்கொண்டிருக்கிறது.
un_diwali
அழகான தீபத்தின் உருவத்துடன் கூடிய “ஹேப்பி தீபாவளி” என்ற வார்த்தைகள் ஐ.நா தலைமையகத்தின் கட்டத்தை அலக்கரித்திருக்கிறது. தீபாவளி ஐ.நாவில் முதல் முறையாக கொண்டாடப்படுவதை அவ்வமைப்புக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். இன்னொரு ட்வீட்டில் இதற்காக அவர் பொது சபையின் தலைவர் பீட்டர் தாம்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தாம்சன் தன்னுடைய ட்வீட்டில் “இருளின் மீது ஒளியும், நம்பிக்கையின்மையின் மீது நம்பிக்கையும், அறியாமையின் மீது அறிவும், தீமையின் மீது நன்மையும் வெற்றி கொள்ளட்டும்..ஐ.நா ஒளிர்கிறது, தீபாவளி வாழ்த்துக்கள்!” என்று பகிர்ந்துள்ளார்.
இந்த வண்ண அலங்கார விளக்குகள் ஐ.நா தலைமையகத்தை இன்றுவரை(அக்டோபர் 31) அலங்கரிக்கும்.
தீபாவளிய்ன் முக்கியத்துவத்தை அங்கீகரித்து அதை கொண்டாடுவதற்கான தீர்மானம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டது.