பொது கழிப்பறைகளில் பெண்கள் வெகுநேரம் வரிசையில் காத்துக்கொண்டிருப்பதை தவிர்க்கும் வண்ணம் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பொது கழிப்பறையை துவங்க அரசு முடிவு செய்துள்ளது. இவை “உலக கழிப்பறை நாளான” வரும் நவம்பர் 19-ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளன.

unisex_toilet

இந்த கழிப்பறைகள் பெரிதாகவும் பெண்களுக்கான வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதத்திலும் இருக்கும் என்றும், மிக மக்கள் நெருக்கமுள்ள இடங்களில் மட்டும் இது போன்ற பொது கழிப்பறைகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. மக்களிடம் இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்று தெரியாமல் இவற்றை நிறைய கட்ட இயலாது என்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் பொது மக்களிடம் இது பற்றி கருத்து கேட்டபோது அவர்கள் இதை பெரும்பாலும் விரும்பவில்லை என்பதே தெரிகிறது. இதற்கு பதிலாக பெண்கள் கழிப்பறையின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிட்டு போகலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.