சூடானில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து: 3 பேர் பலி

Must read

கர்த்துாம்: 

சூடானில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள் ளானது. இந்த கோர விபத்தில் அதில் பயணம் செய்த  3 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள எத்தியோப்பா நாட்டுக்கு சொந்தமான  ராணுவ ஹெலிகாப்டர் 23 பேருடன் சூடான் நாட்டின் தெற்கே கடுக்லி நகரத்தின் எல்லையில் உள்ள அப்யெய் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமான ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து  நொறுங்கியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் இறந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாய முடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் 3 பேரில் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விபத்துக்கு காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

More articles

Latest article