போர் மற்றும் வறுமையால் ஆப்கானில் 6.35 லட்சம் பேர் புலம் பெயர்வு : ஐநா அறிவிப்பு

Must read

ஜெனிவா

ப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போர் மற்றும் வறுமையால் அங்கிருந்து நடப்பாண்டில் 6.35 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என ஐ நா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகுவதாக அறிவித்தன.  அதையொட்டி தாலிபான்கள் நாட்டின் பெரு நகரங்களை ஒவ்வொன்றாக ஆக்கிரமித்தனர்.   இறுதியில் தலைநகர் காபூலைத் தாலிபான்கள் ஆக்கிரமித்ததால் ஆப்கான் நாட்டு அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார்.   தற்போது அங்கு தாலிபான்கள் ஆட்சி நடைபெறுகிறது.  மேலும் இங்கு கடும் வறுமை நிலவி வருகிறது.

இந்த ஆண்டான 2021 ஆம் ஆண்டில் போர் மற்றும் வறுமையால் இதுவரை 6.35 லடம் மக்கள் ஆப்கானில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐநா சபையின் மனித நேய கூட்டமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   அவ்வாறு காபூலில் இருந்து வெளியேறிய 1300 பேர் மற்றும் குணார் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 9300 பேருக்கு ஐநா சபை நிவாரண பொருட்கள் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் மைதான். வார்தான் மாகாணங்களில் இருந்து மட்டும் 63000 பேருக்கு மேல் புலம் பெயர்ந்துள்ளதாகவும் அவர்களுக்கு ஐ நா சபை உணவுப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.   ஐநா சபை இவ்வாறு புஅம் பெயரும் மக்களுக்கு உணவு குடி நீர் மட்டுமின்றி மருந்துகள், கோவிட் பரிசோதனைகள், கொரோனா தடுப்பூசி போடுதல் போன்ற பணிகளுக்கும் முன்னுரிமை அளித்து வருவதாக அறிவித்துள்ளது.

More articles

Latest article