
கோவை:
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் காட்டுயானைகள் நுழைந்து விடாதபடி சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஈஷா யோகா மையம் சார்பில் கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்றுமாலை நடைபெறும் இதன் திறப்புவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இந்தவிழா மாலைநேரத்தில் நடைபெறுவதாலும் யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி என்பதாலும் யானைகள் நுழைந்து விடாதபடி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள்,
விழா மேடை அருகே காட்டுயானைகள் நுழைந்து விடாதபடி வனச்சரக அதிகாரிகள் தினேஷ், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் யானைப்பாதுகாப்பு படையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
[youtube-feed feed=1]