அஸ்ஸாமில் பா.ஜ.க. ஆட்சியின் முதல் முறைகேடு:விவசாய நிலம்  தாரைவார்ப்பு

அஸ்ஸாமின் விவசாயிகள் அமைப்பான க்ரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி (கே.எம்.எஸ்.எஸ்.) அமைப்பும் உல்ஃபா அமைப்பும் இணைந்து சர்ச்சைக்குரிய பாபா ராம்தேவின் பதஞ்சலி டிரஸ்ட்டிற்கு 3800 ஹெக்டேர் போடோ நிலம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
RAMDEV FEATURED NEW1

பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் இடங்களில் எல்லாம் முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்வது வாடிக்கையாகி வருகின்றது.  சமீபத்தில் கூட, மகாராஸ்திரத்தில் வளர்ச்சி என்று ஆட்சியை பிடித்த கையுடன் ஹேமமாலினிக்கு  மிகக்குறைந்த விலையில் நடனப் பள்ளி அமைப்பதற்காக இடம் ஒதுக்கீடு செய்து சர்ச்சரை ஆனது. அதே  போல் தற்போது அஸ்ஸாமில் வளர்ச்சியின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய வுடனேயே,  பாபா ராம்தேவிற்கு யோகா வகுப்புகள் நடத்த 3500 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அஸ்ஸாமின் விவசாயிகள் அமைப்பான க்ரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி (கே.எம்.எஸ்.எஸ்.) அமைப்பும் உல்ஃபா அமைப்பும் இணைந்து சர்ச்சைக்குரிய பாபா ராம்தேவின் பதஞ்சலி டிரஸ்ட்டிற்கு 3800 ஹெக்டேர் போடோ நிலம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.


 
 
 

ABHIJIT ASOMஉல்ஃபா(அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி ) தலைவர் Dr.அபிஜித் அசோம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , பாபா ராம்தே அதிகமான இடம் கேட்பதில் உள்நோக்கம் உள்ளது. நாங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வழைவகுக்கும் யோகக் கலைக்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால் ஒரு முஸ்லிமாக பிரார்த்தனை செய்வதற்கு தனியான இடம் தேவை இல்லை என்பதால் இந்திய யோகாவை கற்பதற்காக த்னியான இடம் ஒதுக்கத் தேவை இல்லை.
யோகாவின் பெயரில் நிலத்தைப் பெற்றுக் கொண்டு அவரது ஆயூர்வேதப் பொருட்களின் விற்பனையை அஸ்ஸாமில் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளனர்.


நிலம் வழங்குவதற்கான அரசியலமைப்பின் ஆறாவது பட்டியல் அமைப்பான போடோலாந்து பிரதேச சபை(பி.டி.சி)யின் முடிவை , நில கையகப்படுத்துதல் மற்றும் நிலம் வழங்குவதற்கு எதிராக மாபெரும் போராட்டங்களுக்கு பெயர் பெற்ற கே.எம்.எஸ்.எஸ். விவசாயிகள் அமைப்பு கடுமையாக ஆட்சேபித்துள்ளது.
யோகாவின் பெயரில் இவ்வளவு பெரிய இடத்தை பெற்றுக்கொண்டு , ராம்தேவ் பால்பண்ணை வைக்கத்திட்டமிட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3800 ஹெக்டேரில் வெறும் 400 ஹெக்டரில் மட்டுமே புறம்போக்கு நிலமாய் உள்ளது. மற்ற இடங்கள் பயன்பாட்டில் உள்ளன. எனவே நாங்கள் இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளது.
SARABANADHA sonowal-modi-assam-759
புதிதாக அஸ்ஸாமில் முதல்வராக பொறுப்பேற்கும் சோனோவாலுக்கு இது முதல் அக்னிப்பரிட்சையாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காங்கிரஸ் அரசு விவசாயம் நிலம் விளைச்சலுக்கு பயன்ப
டாவிட்டால் மற்ற பயன்பாடிற்கு வழிவகுக்கும் சட்டத்திருத்தத்தை கொன்டுவந்தது.

பரேஷ் பராவா

பரேஸ் பரா , உல்ஃபா அமைப்பின் தலைவர் பொடோ தலைவர் ஹங்க்ரமா மோஹிலாரியிடம் தங்களின் முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்,
செவ்வாய்கிழமையன்று சோனோவாலின் முதல்வர் பதவியேற்பு விழாவில் பாபா ராம்தேவ் கலந்துக்கொண்டார்.

 

RAMDEV NEW JOKE
கேலிச்சித்திரம்