ஜெயலலிதாவின் வெற்றியைக் கொண்டாடிய கர்நாடக கிராமத்தின் சிறப்பு !

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

2011 சென்சஸ் கணக்கின் படி, கர்நாடக மாந்தியா மாவட்டத்தில் உள்ள நாகுவஹல்லி கிராமத்தின் படித்தவர் சதவிகிதம்  81.54 % ஆகும். கர்நாடக சராசரியான  75.36 %  யை விட இது அதிகமாகும் .  இந்தக் கிராமத்தில் ஆண்கள் படிப்பது 86.25 % ஆகவும் பெண்கள் படிக்கும் சதவிகிதம்  77.20 %.ஆகவும் உள்ளது. இதற்கு கிராம மக்கள் ஜெயலலிதாவிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். இந்த கிராமமக்கள் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
மார்ச்  19, 1967 அன்று, அதாவது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால், ஜெயலலிதா இளம் நடிகையாய் இருந்தபோது,  நாகுவினஹல்லி எனும் கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்ட நிதிஉதவி ஈட்டும் விதமாய் மைசூர் பலகலைக்கழகத்தில் உள்ள கிராஃபொர்ட் ஹாலில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடனமாடினார்.
 
JEYA DANCE 1

தாயார் சந்தியாவுடன் ஜெயலலிதா

டிக்கெட்டுகள் பத்து, இருபத்தி ஐந்து, ஐம்பது ரூபாய் கட்டணமாய் வசூலிக்கப்பட்டது.
எனவே இன்றும் அந்தக் கிராம மக்கள் பெரும் ஆவலாய் ஜெயலலிதாவின் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியினை தொலைக்காட்சிப் பெட்டியில் மிகுந்த ஆவலுடம் கண்டுகளித்தனர் என்று நியூஸ்-18  ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது.

 

காவிரி நீர் பிரச்சனையால், பொதுவாய் தமிழக அரசியல் வாதிகளை வெறுத்திடும் கர்நாடகர்கள் ஒரு தமிழக முதல்வரின் மீது ஈடுபாடு கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கும் விசமாகும். எனினும் ஜெயலலிதா பிறப்பால் ஒரு கன்னடர் என்பது அவருக்குக் கூடுதல் சிறப்பு ஆகையால் தான்  அவருக்கு இந்த மரியாதை என்றால் அது மிகையில்லை.

மைசூரில் உள்ள செலுவம்பா மருத்துவமனையில் 1948 ஆம் ஆண்டு ஜெயலலிதா பிறந்தார்.
ஜெயலலிதாவிற்கு நான்கு வயதாய் இருக்கும் போதேஅவரது தந்தையார் ஜெயராம்  இறந்துவிட்டார்.
அதன் பிறகு அவரது தாயார் சந்தியா பெங்களூருவிற்கு இடம் பெயர்ந்தார்.
அங்குத் தான் ஜெயலலிதா பிரபல பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் துவக்கக் கலவியைப் பயின்றார்.
சந்தியா ராம விலாசா, லலிதா விலாசா, ஜெயா விலாசா ஆகிய மூன்று பங்களாக்களை விற்றுவிட்டு சென்னையில் அவரது அத்தையும் நடிகையுமான அம்புஜா எனும் வித்யா வுடன் இடம்பெயர்ந்துவிட்டனர்.

சென்னையில் சர்ச்பார்க் கான்வென்டில் உயர்நிலைவகுப்பைப் பயின்றார்.
ஜெயாவின் சகோதரர் ஜெயக்குமார் இளம்வயதில் காலமானார்.
ஜெயா தமது 14 வயதில் முதல் நடன அரங்கேற்றத்தை  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசன், கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் உடன் ஜெயலலிதா


 
காமராஜருடன் ஜெயலலிதா

கருணாநிதியுடன் ஜெயலலிதா (குரூப் போட்டோ)

 
RELATED NEWS: ஜெயலலிதா,  அவரது  தாயார் சந்தியாவிற்கும் ராஜிவ்காந்திக்குமான உறவுமுறை

More articles

Latest article