பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கார் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு ஒரு வீடியோவை பதிவு செய்தார்.

அந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்த நிலையில் அதில் அவர் விதிகளை மீறி சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்தது குறித்து விமர்சிக்கப்பட்டது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து நேற்று அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

42 வயது மதிக்கத் தக்க ஒருவர் காரில் சீட் பெல்ட் அணியாமல் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலானதை அடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று லங்காக்ஷயர் காவல்துறை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.