ஆசிய கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றில் வெற்றிப்பெற்ற கத்தார் அணி வீரர்கள் மீது ரசிகர்கள் ஷூ வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் இந்த தொடரில் 16 அணிகளுக்கு பதிலாக 24அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்றில் வெற்றிப்பெற்ற ஈரான், கத்தார். யுஏஇ மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
அரையிறுதி சுற்றில் முதல் போட்டியில் ஈரான் மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஜப்பானை வீழ்த்தி ஈரான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. அதனை தொடர்ந்து அபுதாபியில் அரையிறுதியில் 2வது போட்டி நடைபெற்றது. இதில் கத்தார் மற்றும் யுஏஇ மோதின. போட்டியின் துவக்கம் முதலே அசத்திய கத்தார் அணியின் வீரர்கள் கோக்கி, அலி, அல் ஹய்தாஸ் மற்ரும் இஸ்மாயில் தலா ஒருகோல் அடித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோல் அடிக்க யுஏஇ அணி வீரர்கள் முயன்றும் அது தோல்வியில் முடிந்தது. இதனால் கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி வெற்றிப்பெற்றது. இந்நிலையில் போட்டியின்போது கத்தார் அணி கோல் அடித்த போது ஆத்திரமடைந்த யுஏஇ அணியின் ரசிகர்கள் மைத்தானத்தில் ஷூக்களை தூக்கி வீசினர். அதுமட்டுமின்றி தண்ணீர் பாட்டில்களையும் எறிந்தனர். இதனால் ஆட்டம் பாதிலேயே இரண்டு முறை தடைப்பட்டது.
போட்டியின் முழுவதுமே கத்தாருக்கு எதிராக யுஏஇ ரசிகர்கள் கோஷங்கள் எழுப்பியதால் ஆட்டம் முழுவதும் மைதானத்தில் பரபரப்பு நிலவியது.