டில்லி

ருத்து திருட்டு செய்யும் மாணவர்களின் பதிவு பறிமுதல் செய்யப்படும் எனவும் ஆசிரியர்கள் பணி இழப்பார்கள் எனவும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

மாணவ ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு அறிக்கையை பல்கலைக்கழகத்துக்கு அளிப்பது வழக்கம்.   இவ்வாறு ஆய்வு அறிக்கை அளிக்கும் போது பலரும் தங்களின் கருத்துக்களுடன் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள கருத்துக்களையும் சேர்த்து அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.   இந்தக் குற்றசாட்டு மாணவர்கள் மீது மட்டுமின்றி ஆசிரியர்களும் இவ்வாறு கருத்துத் திருட்டில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து பல்கலைக்கழக மனியக் குழு கடந்த மார்ச் மாதம் ஒரு கூட்டத்தை கூட்டி விவாதித்தது.   விவாதத்தின் முடிவில் இவ்வாறு கருத்து திருட்டு செய்யும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தண்டனை அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.     அந்த சட்டத்தில் கருத்து திருட்டு என்பதை மூன்று விதமாக பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்ற பட்ட சட்டத்தின் படி, “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து திருட்டு செய்வது கண்டிக்கத்தக்கது.   ஏற்கனவே உள்ள கருத்துக்களில்  தனது கருத்துக்களுடன் ஒத்துப் போகும் சிலவற்றை ஆய்வு அறிக்கையில் உபயோகப் படுத்துவது தவிர்க்க முடியாது என கூறப்படுகிறது.   அதன்படி 10% வரை ஏற்கனவே உள்ள கருத்துக்களை உபயோகிப்பதற்கு தண்டனை கிடையாது.

அதே நேரத்தில் 10% முதல் 40% வரை கருத்து திருட்டு இருக்கும் என்றால் அந்த ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பப்படும்.   புதிய ஆய்வறிக்கையை அவர்கள் அளிக்க வேண்டும்.    அடுத்த கட்டமாக 40% முதல் 60% கருத்து திருட்டு இருப்பின் அந்த மாணவர்களுக்கான உதவித் தொகை ரத்து செய்யப்படும்.   ஆசிரியர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும்.   அத்துடன் இருவருட சேவையும் ரத்து செய்யப்படும்

100% கருத்து திருட்டு இருப்பின் அந்த மாணவர்களின் பதிவு ரத்து செய்யப்படும்.   மேலும் அவர்களுக்கு எதிர்காலத்தின் எந்த ஆய்வும் மேற்கொள்ள தடை விதிக்கப்படும்.   ஆசிரியர்கள் இது போல் தவறிழைத்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்ப்டுவார்கள்.”  என அறிவிக்கப்பட்டுள்ளது.