டில்லி

சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்பு கணித மறு தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சி பி எஸ் ஈ பத்தாம் வகுப்பு தேர்வில் கணித வினாத்தாட்கள் அவுட் ஆனது.    அதே போல 12ஆம் வகுப்பு பொருளியல் தேர்வு வினாத்தாளும் வெளியாகியது.    இதை ஒட்டி விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்  ஏற்கனவே மறு தேர்வுகள் நடைபெறும் என அறிவித்த சி பி எஸ் ஈ வாரியம் பிறகு அதை ரத்து செய்தது.   மறு தேர்வுகள்  வரும் ஜூலை மாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்தது.    மறு தேர்வு ஜூலை மாதத்துக்கு பதில் எப்ரல் மாதம் நடைபெற வேண்டும் என அந்த வழக்கு மனுவில் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது.    இந்த வழக்கு நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஹரிசங்கர் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் இந்த அமர்வு சிபிஎஸ்ஈ க்கு மறு தேர்வு பற்றி கேள்வி எழுப்பி உள்ளது.  அமர்வு, “ஜூலை மாதம் மறு தேர்வு நடைபெறும் என எவ்வாறு முடிவு செய்யப்பட்டது?  தற்போது மறு தேர்வு நடத்தும் திட்டம்  உள்ளதா?  அப்படி இருந்தால் தேர்வுகள் எப்போது நடைபெறும்?

இந்த தேர்வுகளை உடனடியாக  நடத்தவில்லை எனில் மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பில் சேர இயலாமல் போகும்.   அதனால் ஒரு வருடம் வீணாகும்.   அத்துடன் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப் படும் வரையில் மாணவர்கள் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருப்பதாகவே நினைப்பார்கள். “ என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது சிபிஎஸ்ஈ  பத்தாம் வகுப்பு கணிதத்துக்கு மறு தேர்வு கிடையாது என அறிவித்துள்ளது.