சென்னை:  தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

2025-26-ம் கல்வி ஆண்​டில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு ஆன்லைனில் வரும் 21-ம் தேதி தொடங்​கு​கிறது என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  முதற்கட்டமாக அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து, மற்ற இடங்களுக்கான கலந்தாய்வுகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,   தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணி யன் அறிவித்துள்ளார்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கி முடிவடைந்த நிலையில், மருத்துவ படிப்பில் சேர 75,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  விண்ணப்பித்தவர்களில்,  சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர்,  மாணவர்களுக்கான இறுதி பட்டியல் ஜூலை 25ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.

மேலும்,  போலி ஆவணங்களை அளித்த 20 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 3 ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது என்றவர், இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கும் என கூறினார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஜூலை 21-ல் தொடங்குகிறது! மத்தியஅரசு

[youtube-feed feed=1]