திருவண்ணாமலை

மிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுக தூங்காது எனக் கூறி உள்ளார். 

ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இதில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவ்வரிசையில் திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார் .

அப்போது உதயநிதி ஸ்டாலின்.

“பிரதமர் மோடி தி.மு.க.விற்கு தூக்கம் போய்விட்டது என்று கூறுகிறார். பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும் வரை தி.மு.க. தூங்கப் போவதில்லை. தூக்கம் பார்க்காமல் நாங்கள் தேர்தல் பிரசாரம் செய்யப்போகிறோம். திருவண்ணாமலையில் தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெறவைத்தால் நான் மாதம் 2 முறை இங்கு வந்து தங்கி உங்களின் தொகுதி பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்”

என்று கூறியுள்ளார்.