சென்னை

றைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பெயரில் உள்ள சாலை பெயர் பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

மறைந்த பிரபல பாடமக்ர் எஸ் பி பாலசுப்ரமணிய்ம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் ஆவார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி இவர் மரணம் அடைந்தார்.

தமிழ்த் திரையுலகிற்கு அவர் ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயரிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்றி எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை கவுரவிக்கும் விதமாக அவரது பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த அறிவிப்பு பகையில்ல், “எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை” எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.