சென்னை

டிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

திரைப்பட நடிகர்கள் அரசியலில் இறங்குவது பல ஆண்டுகாலமாக நடந்து வருகிறது. . இதில் எம்.ஜி.ஆர்.,  ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற தலைவர்களைத் தொடர்ந்து, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் தனித்தனியாக அரசியல் கட்சிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியிருக்கிறார். மேலும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்  நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் விஜய் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட் சி போட்டியிடாது எனவும் இந்த தேர்தலில் தமது கட்சி எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்

இன்று சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பை நடத்தி உள்ளார்

அப்போது அவர்,

”நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும். புதிய கட்சியைத் தொடங்கிய விஜய்க்கு எனது பாராட்டு. இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது:

என்று தெரிவித்துள்ளார்.