சென்னை 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தேசிய புலனாய்வு மையம் நடத்தும் சோதனையை எதிர்த்து ஒரு அவசர முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் (என் ஐ ஏ) சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது  இது பிறநாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் உள்ளதாக எழுந்த புகார், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. வரும் 7 ஆம் தேதி அன்று சாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் அவசர முறையீட்டு மனு அளித்துள்ளது. அவசர முறையீட்டை இன்றே விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி ரமேஷ் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினர் என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் உடனடியாக சோதனையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி உள்ளனர்.

விசாரணையின் போது என்ஐஏ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ்,

”மனுதாரர் திங்கள்கிழமை 5ஆம் தேதி ஆஜராக அவகாசம் வேண்டும் அவர் 5 ஆம் தேதி ஆஜராகலாம் என்று தெரிவித்துள்ளோம். கைது நடவடிக்கை ஏதும் இருக்காது, சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்போம்

என்று தெரிவித்தார்.

இவ்விரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.