தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது.

உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படத்திற்கு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட உள்ளதாக படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். இப்படம் வசூலில் எதையும் சாதிக்கவில்லை.

இந்த படம் ஏற்கனவே பல்வேறு விருதுகளை குவித்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது என அப்படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.