சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து தலைப்பு செய்தியாக மாறியிருந்தார்.
திரைப்பட முன்னணியில், ‘கண்ணை நம்பாதே’, ‘ஏஞ்சல்’, மற்றும் ‘ஆர்டிகிள் 15 ரீமேக்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் உதய். இதனை தெடர்ந்து ஒரு புதிய படத்திற்காக இயக்குனர் பாலா உதயநிதியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
தற்போது இதில் உதயநிதியும், அருள்நிதியும் இணைந்து நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். தமிழ் சினிமாவில் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவரான அருள்நிதி ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர்.
பாலா இயக்கத்தில் சகோதரர்கள் உதயநிதியும், அருள்நிதியும் இணைந்து நடிக்கும் விஷயம் கோலிவுட்டில் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறது.