பர் நிறுவனம் இந்தியாவில் ஏர்கண்டிஷ்ன் பஸ் சர்வீஸ் இயக்கத் தயாராகி வருவதாக தெரிவித்து உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் கால்பதித்த அமெரிக்க நிறுவனமான ஊபர் நிறுவனம், தொடக்கத் தில்  அதிகளவிலான சலுகைகளை வாரி மக்களின் மதிப்பை பெற்றது. தற்போது வழக்கமான கட்டணங்களையே வசூலித்து வருகிறது.  இதன் காரணமாக தற்போது இந்தியாவில் பிரபலமான டாக்சி சேவைகளில் ஒன்றாக மாறி உள்ளது.

இந்த நிறுவனம், சமீபத்தில் உணவு டெலிவரி வணிகத்திற்குள் இறங்கி சுவிக்கியின் இடத்தையும் கைப்பற்றி உள்ளது.  தொடர்ந்ந்து மகாராஷ்டிரா மாரிடைம் போர்டு உடன் இணைந்து படகு சவாரி செய்யும் புதிய நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இனிமேல் பேருந்து சேவையை ஆரம்பிக்க முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய  இந்திய மற்றும் தெற்காசிய தலைவர் பிரதீப் பரமேஸ்வரன, இது தொடர்பாக கூறுகையில், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் போன்று இந்தியாவில் அடுத்த 12 மாதங் களுக்குள் ஏசி பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் இதற்காக பொதுமக்களின் வேலை நிமித்தமான போக்கு வரத்து நிரம்பிய வழித்தடங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டது என்றும் கூறி உள்ளார்.  மேலும், இந்த குளிர்சாதன வசதி கொண்ட  பேருந்துகளில் பயணிகள் தங்களின் இருக்கையை தியேட்டர்களில் தேர்ந்தெடுப்பது போன்றே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே ஓலா நிறுவனம் இந்தியாவில், கடந்த 2015ம் ஆண்டு ஷட்டில் என்ற பெயரில் டில்லி, ஐதராபாத் நகரங்களில் பேருந்து சேவையை இயக்கி, அது வெற்றி பெறாத நிலையில், தற்போது ஊபர் நிறுவனம் பேருந்து சேவையை இயக்க முன்வந்துள்ளது.