புதாபி

வீட்டு வேலை புரியும் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக தனியாக புதிய நீதித்துறை ஒன்றை ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டு வேலை புரியும் பணியாளர்கள் அதிகம் உள்ளனர்.   உள்நாட்டினர் தவிர பல வெளிநாட்டினரும் இங்கு வீட்டு வேலைப் பணிகளில் அமர்த்தப் படுகின்றனர்.   இவர்களுக்கு எதிராக பல குற்றங்கள் இழைக்கப்படுவதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.   அனைவரும் சமமாக பாவிக்கப் பட வேண்டும் என ஆணையம் அரசுக்கு தெரிவித்தது.

அதை ஒட்டி அபுதாபியின் துணை பிரதமரும் அபுதாபி நீதித்துறை தலைவருமான ஷேக் மன்சூர் பின் சாயத் அல் நஹ்யான் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.   அதில் ”அபுதாபியில் வீட்டு வேலை புரியும் பணியாளர்களுக்காக புதிய நீதித்துறை அமைக்கப்பட்டுள்ளது.   இந்த நீதித் துறையின் கீழ் உள்ள நீதி மன்றங்களில் வீட்டு வேலை புரியும் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப்படும்.

இதன் மூலம் நீதித்துறையின் சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.   சமுக, பொருளாதார, மதம் சம்பந்தப்பட்ட எல்லா பிரிவினரையும் தற்போது  ஒரே குடையின் கீழ் கொண்டு வர இந்த நீதித்துறை சட்டங்கள் உதவும்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.