க்னோ

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல குழந்தைகள் இறந்த நிலையில் உ பி முதல்வர் கிருஷ்ண ஜெயந்தியை விமரிசையாக கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச முதல்வரின் சொந்த ஊர் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக சுமார் 65க்கும்மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்தது தெரிந்ததே.  மாநில மக்கள் அனைவரும் இன்னும் இந்த துக்கத்தில் இருந்து மீளாமல் உள்ளனர்.  இது நிகழ்ந்து ஒருவாரம் கூட முடியாத நிலையில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் அரசு சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை விமரிசையாக கொண்டாட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று மாநில டி ஜி பி சிங் குக்கு அவர் அனுப்பியுள்ள தகவலில், “கிருஷ்ண ஜெயந்தி என்பது முக்கியமான ஒரு பண்டிகை.   அதை விமரிசையாக கொண்டாட காவல்துறை அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.   இதை தொடர்ந்து டி ஜி பி சிங், அனைத்து மாநில மற்றும் ரெயில்வே காவல் அதிகாரிகளுக்கு இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஆணையிட்டுள்ளார்.   இதற்கு முன்பு நடந்த கொண்டாட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு நடத்த வேண்டும் என செய்தி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தங்கள் ஊழியர்களுக்கு உத்தரவு இட்டுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் வைபவ் மகேஸ்வரி,  “இந்த அறிவிப்பு மிகவும் முரண்பாடானது.  அவர்களுடைய மனப்பான்மையை தெளிவாகக் காட்டுகிறது.    இவ்வளவு மாபெரும் துக்கத்திலும் தங்களின் கொண்டாட்டங்களை கைவிட தயாராக இல்லாதவர்கள் என்பது தெளிவாகிறது” எனக் கூறி உள்ளார்.

மற்றும் பல அரசியல் தலைவர்களும் இதை எதிர்த்த போதிலும், இந்துக்கள் அமைப்புக்கு பயந்து அதை வெளியே தைரியமாக சொல்ல பயப்படுகின்றனர் என உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்