சென்னை: சீனாவில்இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களது மாதிரி,  புதிய வகை கொரோனாவா என்பதற்கான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

சீனாவின் ஆய்வகம் ஒன்றில் இருந்து  கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில்  பரவத்தொடங்கிய பெருந்தொற்றான கொரோனா, கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடக்ளை புரட்டிப்போட்டது. கடந்த சில மாதங்களாக தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. ஆனால், தற்போது மீண்டும் உருமாறிய நிலையில், சீனாவை மீண்டும் ஆட்டுவித்து வருகிறது. இந்த கொரோனா சீனாவுக்கு சென்று வந்தவர்கள் மூலம் அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் சிலருக்கு பாதிப்பு இருப்பதுகண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, விமான நிலையங்களில் கொரோனா சோதனை உள்பட பொதுமக்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், நேற்று மதுரை வந்த 3 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கருதி சோதனை செய்யப்பட்டது. அதில், விருதுநகர் பகுதியை சேர்ந்ரத தாய், மகளுக்கு கொரோனா உறுதி செய்யப்ட்டு உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில்,  துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த 2 பேர் துபாயில் இருந்து சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேருக்கும் புதிய வகை கொரோனாவா அல்லது வேறு வகையா என கண்டறிய மாதிரிகளை அனுப்பி பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் கொரோனோ தொற்றுக்கு உள்ளான 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.