தமிழக அமைச்சரவையில் மேலும் இருவருக்கு பதவி!

Must read

சென்னை:

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மேலும் இருவருக்கு பதவி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 22ஆம் தேதியும் மறுநாள் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று தி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சிலர் தலைமை செயலகத்துக்குச் சென்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமியை, சந்தித்தனர்.

தொகுதி பிரச்சினைக்காக முதல்வரை சந்தித்தாக இவர்கள்  கூறினாலும், தங்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே சந்தித்தனர் என்று தகவல் பரவியது.

அதேபோல், ஆளுங்கட்சியில் உள்ள எஸ்.சி.எஸ்.டி. இன எம்.எல்.ஏ-க்களும் ஆலோசனை நடத்தியதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த எம்.எல்.ஏக்கள் தனி அணியாக செயல்பட ஆரம்பித்து, அரசுக்கு தரும் ஆதரவை விலக்கொண்டால் அரசு கவிழும் அபாயம் உள்ளது.

இதையடுத்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன்  ஆலோசனை நடத்தினார்.  தற்போது, முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 31 பேர்  அமைச்சர்களாக  இருக்கிரார்கள்.

அரசியலமைப்பு சட்டப்படி ஒரு மாநிலத்தில் இருக்கும் மொத்த எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையில் 15 சதவிகிதம் வரை  அமைச்சர்கள் இருக்கலாம். அதன்படி, தமிழக அமைச்சரவையில் மொத்தம் 35 பேர் அமைச்சர்களாக முடியும்.

ஆனால், தற்போது 31 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்கும் நிலையில், மேலும் நான்கு பேர் வரை அமைச்சர்களாக முடியும்.

இந்த நிலையில்தான் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆலோசனையின் முடிவில் தற்போதைக்கு புதிதாக இருவருக்கு அமைச்சர் பதவி தருவது என்று முடிவானதாக கூறப்படுகிறது.  , ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ. தங்கதமிழ் செல்வன் மற்றும் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர்தான் ந்த இருவர் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் இது தொடர்பான பதவி ஏற்பு விழா நடக்கும் என்று தெரிகிறது.

 

More articles

Latest article