தமிழக அரசின் இரண்டு முக்கியத் திட்டங்கள்
தற்போது இரண்டு முக்கியத் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது!
முதலில், ” மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம் மக்களுக்கு அவர்களைத் தேடிச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு, சுமார் 5,00,000 பேர் பயன் அடைந்துள்ளனர்!
அதுபோலவே, கொரோனா வால், தடைபட்ட, பள்ளிப் பிள்ளைகளின் கல்வியை சீரமைக்கும் பணியில் அரசு களத்தில் தீவிரமாக இறங்கி உள்ளது!
பிள்ளைகளின் இல்லங்கள் அருகிலேயே சென்று மாலை 5 மணியில் இருந்து 7 மணிவரை ஆசிரியர்கள் பாடங்களைப் பயிற்றுவிக்க இருக்கிறார்கள்!
முந்தைய ” அறிவொளி” இயக்கம் போலவே இத்திட்டம் செயல்பட இருக்கிறது!
இதற்காக ஏறத்தாழ 1,20,000 ஆசிரியர்கள் தயாராகி வருகிறார்கள்! அவர்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்!
சுகாதாரத் துறையையும், பள்ளிக் கல்வித் துறையையும் முறையே அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை வைத்து சிறப்புடன் இயக்கும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை மக்கள் வாழ்த்து கிறார்கள்!
நன்றி : ஓவியர் இரா. பாரி