மாடுகளுக்காக மனிதர்கள் கொலை: அஸ்ஸாமிலும் அரங்கேறியது!

Must read

 

Two Beaten to Death on Suspicion of ‘Cow Theft’ in Assam

 

மாடுகளுக்காக மனிதர்களை அடித்துக் கொல்லும் கொடூரம் தற்போது அன்றாட நிகழ்வாகி விட்டது. அஸ்ஸாம் மாநிலம் காசாமாரி பகுதியில், மாடுகளைத் திருட முயன்றதாகக் கூறி இருவரை ஒரு கும்பல் அடித்தே கொன்றுள்ளது.

 

வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை இருவர் அங்கிருந்து திருட்டுத் தனமாக ஓட்டிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அதைப் பார்த்த சிலர் கூச்சலிட்டதை அடுத்து, கிராமத்திற்குள்ளிருந்து திரண்டு வந்த கும்பல், இருவரையும் கடுமையாக தாக்கி உள்ளது. ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு வரை ஓட, ஓட விரட்டித் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அதில் ஒரு நபர் இறந்து விட்டதாகவும், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அடித்துக் கொன்ற கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். பாஜக ஆட்சி அமைந்துள்ள மாநிலங்களில் மாடுகளுக்காக மனிதர்களைக் கொல்லும் சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாக அரங்கேறி வருகின்றன.

More articles

Latest article