கூடலூர்:
சினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கவுசல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மசினகுடி மாவனல்லா பகுதியில் இரவு தனியார் விடுதி அருகே காட்டு யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து காட்டு யானை மீது விசிய வீடியோ சமூக வலை தளங்களில் விரலானது.

இதையடுத்து புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர்கள் காந்தன், மாரியப்பன் உள்ளிட்ட வனத்துறையின் தனிப்படையினர் விசாரணை நடத்தி, 2 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில்,காட்டுயானைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்த தனியார் விடுதிக்கு கூடலூர் வனத்துறையினர் சீல் வைத்தனர்.

இந்நிலையில், மசினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கவுசல் தெரிவித்துள்ளார்.