மும்பை:
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. 196 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து வென்றது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் டெல்லி – கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.