சென்னை,

ஜெயலலிதா மறைவைதொடர்ந்து அதிமுக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாகவும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில்  இரு தரப்பினரும் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை கோரி தேர்தல் ஆணை யத்திடம் முறையிட்டனர்.

இதை விசாரித்த தேர்தல் ஆணையம் இரட்டை இலையை தற்காலிகமாக முடக்கி உள்ளது.

இதுகுறித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது,

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது என்ற உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தும் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு கிடைக்காமல் போனது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டைஇலை சின்னத்தை சட்டப்படி எப்பாடுபட்டாவது மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். கட்சியையும், ஆட்சியையும் இரட்டைஇலை சின்னத்தையும் தமிழ்மக்களும், அதிமுக தொண்டர்களும் மகிழும் வண்ணம் உறுதியாக மீட்டெடுப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.