டில்லி,

முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்பது குறித்து, தேர்தல் ஆணையம் விசாரணையை மீண்டும்  16ந்தேதிக்கு வைத்திதுள்ளது.

13ந்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்திருந்த தேர்தல் ஆணையம் தற்போது 16ந்தேதிக்கு மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

இரட்டை இலையை மீட்பது தொடர்பாக இந்திய  தேர்தல் ஆணைய்ததில் கடந்த 6ந்தேதி விசாரணை நடைபெற்றது. இதற்கிடையில் டிடிவி தரப்பு சார்பாக, ஆவணங்கள் தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரியிருந்தது.

இந்நிலையில், இறுதி விசாரணை 13ந்தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. ஆனால், தற்போது விசாரணையை 16ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது 5 நாட்கள் பரோலில்  சசிகலா வந்துள்ளதால், இரட்டையை இலைகுறித்து அவருடன் ஆலோசித்து மேலும் ஆவனங்கள் தாக்கல் டிடிவி தினகரன் தரப்பினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.