எல்லைதாண்டியதாக தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு! இலங்கை

ராமநாதபுரம்.

ராமேஸ்வரம் அருகே உள்ள  நெடுந்தீவு மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 5 மீனவர்களை கைது செய்தனர்.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்த லைமன்னார் இடையே நடுக்கடலில் நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை மீனவர்கள்,  தமிழக மீனவர்கள் 5 பேரை   கைது செய்துள்ளனர்.

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி  இலங்கை கடற்படையினர் கைது செய்தும்,  அவர்களின்  விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான மீனவர்கள் ராமேஸ்வரம் அடுத்த  தங்கச்சி மடம் விக்டோரியா நகரைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற பாண்டி, ஜார்ஜ், ரோமியோ, முருகன், தரம்ஜிஸ் ஆகியோர்தான் கைது செய்யப்பட்டுள்ளதாக சக மீனவர்கள் கூறி உள்ளனர்.
English Summary
Tamil Nadu fishermen arrested, Sri Lankan Navy action