டில்லி,

திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அமைச்சர்களும் இனிப்பு வழங்கி தங்களது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.

இன்று காலை முதலே இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், இபிஎஸ் ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இடையில், தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று டிடிவி தரப்பினர் கேள்வி எழுப்பினர்.

இதன் காரணமாக அதிமுகவினரின் மகிழ்ச்சி சற்று தடை பட்டது. பின்னர் பிற்பகல் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து, இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

அதுபோல தமிழக அமைச்சர்களும் ஒருவருக்கொருவர் சுவிட் எடுத்து கொண்டாடி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.