சென்னை

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசனை இன்னும் 6 வாரங்களுக்குக் கைது செய்யப்போவதில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2004 ஆம் வருடம் தமிழக அரசு பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிட்டது.   அதை ஒட்டி கோவில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது.   அந்தக் குழுவில் டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.    இந்நிலையில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பல சிலைகள் திருடப்பட்டது கண்டறியப்பட்டது.   அதையொட்டி வேணு சீனிவாசன் மீது குற்றப்பத்திரிகை பதியப்பட்டது.

வேணு சீனிவாசன் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.  அந்த மனுவில், “கடந்த 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கோவில் திருப்பணிக்குழுவில் நன் உறுப்பினராக இருந்த போதிலும் ஒவ்வொரு கோவிலிலும் உள்ள தலைமை அதிகாரி மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கோவில் கும்பாபிஷேகம் மற்றும் புனரமைப்பு பணியை மேற்கொண்டனர்.

நான் கபாலீஸ்வரரின் பக்தர் என்னும் முறையில் கோவில் வளாகம், கோபுரம் மற்றும் தரையில் வண்ணம் பூச மட்டும் எனது சொந்த நிதியில் இருண்டு ரூ.70 லட்சம் வரை செலவு செய்துள்ளேன்.  நான் சிலை திருட்டு விவகாரம் குறித்து எதுவும் அறியாதவன் ஆவேன்.

எனக்கும் அந்த கோவிலுக்கும் இடையில் பக்தன் என்பதைத் தவிர வேறு தொடர்பு இலை.  அது மட்டுமின்றி கோவில் புனரமைப்புக்கு நான் மொத்தம் ரூ. 25 கோடி எனது பணத்தை செலவழித்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சிலை திருட்டு சிறப்புப் பிரிவு அமர்வில் விசாரிக்கப்பட்டது.  இந்த அமர்வில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு இடம் பெற்றுள்ளனர்.  அந்த அமர்வில் காவல்துறை சார்பில் இன்னும் அறு வாரங்களுக்கு வேணு சீனிவாசன் கைது செய்யப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.  உயர்நீதிமன்ற அமர்வு இந்த மனுவின் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.