சென்னை: தவெகவின் விசில் சத்தத்தில் தீய சக்தி, ஊழல் சக்தி ஓட வேண்டும்… பவளவிழா பாப்பாவிற்கு வேறு என்ன தெரியும்? என்று விமர்சித்ததுடன், தமிழ்நாட்டில் எத்தனை என்ஜின் வந்தாலும், டாப் என்ஜின் த.வெ.க தான் என அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் திருவள்ளுவர் இப்போது குறள் எழுதியிருந்தால், அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க முதற்றே உலகு என்று எழுதியிருப்பார் என்றுவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகதான் மக்களுடைய ஒரே ஆப்ஷன் அதர்வைஸ் நோ டைவர்ஷன் என தெரிவித்துள்ளார்.

த.வெ.க தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்தில் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த.வெ.க தலைவர் விஜய் கொள்கை தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் த.வெ.க கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் கட்சி நிர்வாகிகளி மத்தியில் பேசிய விஜய், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா என மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.
2017-க்கு பிறகு, 2021-க்கு பிறகு தமிழ்நாட்டு நிலையை யோசித்த தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டதை நினைத்து கண்ணீர் வடித்தனர். இன்றைக்கு இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சி தான் தமிழக வெற்றிக்கழகம்.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது சட்டசபையில் கேலி செய்தனர். எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்த பின் அரசியலில் அதிக அனுபவம் கொண்டவர்களுக்கு கூட கோட்டையை பிடிப்பது என்பது கனவாகவே இருந்தது. அவர்கள் துருப்பிடித்த வியூகத்தை கையில் எடுத்துள்ளனர்.
1977-ம் ஆண்டு போல பழைய நஞ்சு போன தீஞ்சு போன ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும் பழைய டப்பாவை தான் உருட்ட தெரியும். அதற்காக நாம் அவர்கள் செய்த தவறை வெளியே சொல்லாமல் இருக்க முடியுமா? ”அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு”. மக்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பது தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான்.
திருவள்ளுவர் மட்டும் இன்று இருந்திருந்தால் தி.மு.க-வை பற்றி என்ன திருக்குறள் எழுதியிருப்பார் தெரியுமா? கற்பனையாகதான் சொல்கிறேன். அது என்ன வென்றால் அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க முதற்றே உலகு என்று எழுதியிருப்பார்.
தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருக்கிறது. என்னுடைய அக்கா, அம்மா என அனைவரும் த.வெ.க.விற்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது. சட்டசபை தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டுமே முடியும். த.வெ.க. தொண்டர்களை எந்த விலை கொடுத்தாலும் வாங்க முடியாது. த.வெ.க. தொண்டர்கள் தான் எனக்கு மிகப்பெரிய பலம். தொண்டர்களை மட்டும் நம்பி தான் தமிழக வெற்றிக்கழகமும், நானும் இருக்கிறேன் தமிழ்நாட்டில் த.வெ.க. விசில் சின்னம் போகாத ஊரே இல்லை.
தமிழ்நாட்டில் எத்தனை என்ஜின் வந்தாலும், டாப் என்ஜின் த.வெ.க தான். விசில் சத்தத்தில் தீய சக்தி, ஊழல் சக்தி ஓட வேண்டும் . தற்போது மேற்கொள்ளப்பட்டு இருப்ப கருத்துக்கணிப்பு அல்ல கடுப்புக் கணிப்பு என்றும் விமர்சித்தார்.
மாபெரும் மக்கள் சக்தியாக நமது அணி ஒரு பக்கம், அடுத்து தி.மு.க தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் ஒருபக்கம், அடுத்து பா.ஜ.க தலைமையில் மற்றும் பலர் இப்படி எத்தனை சக்திகள், எத்தனை கட்சிகள் வந்தாலும் தி.மு.க-வை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் தான் முடியும் என்றவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகதான் மக்களுடைய ஒரே ஆப்ஷன் அதர்வைஸ் நோ டைவர்ஷன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]