சென்னை: புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள மாநில முதல்வர் ரங்கசாமி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிம் பேசும்போது, தமிழ்நாட்டில்  வெற்றிபெற்றுள்ள தவெக தலைவர் விஜய் விரைவில் அம்மாநில முதல்வராக பதவி ஏற்பார் அவருக்கு வாழ்த்துகள் என என்ஆர்காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார்.

புதுவையில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, ரங்கசாமி விரைவில்   5 ஆவது முறையாகமுதல்வராகப் பதவியேற்கிறார்.

இதையடுத்து  இன்று கவர்னர் மாளிகை சென்று கவர்னரிடம்  தனது முதல்வர் பதவியை ராஜிநாமா  கடிதம் கொடுத்தார். விரைவில் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார்.

இந்த நிலையில், கவர்னர் மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய ரங்கசாமி,  “புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். விரைவில் புதிய அரசு பதவியேற்கும்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோர, கடிதம் கொடுப்பேன்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களின் தமிழ்நாடு அரசியல் சலசலப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறியவர், அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்  சீக்கிரமே முதல்வராக  பதவி ஏற்பார். ஆட்சி அமையும்” என்றார்.

[youtube-feed feed=1]