சென்னை: நாளை (மார்ச் 10ம் தேதி) முதல் தவெக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வாரம் இறுதி அல்லது அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், தவெக சார்பில், சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நாளை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நேர்காணல், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. .
இந்த நிலையில் தற்போது அது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 10 ஆம் தேதி முதல் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தேசமாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை நேரடியாக தவெக தலைவர் விஜய் சந்தித்து நேர்காணல் நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளவர்களை இறுதி செய்யும் பணிகள் தொடங்கவுள்ளதாக தெரிகிறது
இதற்கிடையில் சில தொகுதிகளில் போட்டியிடக்கூடிய சாத்தியமான வேட்பாளர்கள் பற்றிய தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்று ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். அதனால் அவர் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மேலும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தியாகராய நகரில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில், அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
[youtube-feed feed=1]