சென்னை:

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏராள மானோர் படுகாயமுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், தூத்துக்குடி, நெல்லை,குமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவையை தமிழக அரசு முடக்கி உள்ளது.

இதை எதிர்த்து, வழக்கறிஞர் சூர்யப்பிகாசம் என்பவர் சென்னை உயர்நிதி மன்றத்தில் முறையீடு செய்து மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தூத்துக்குடி,குமரி,நெல்லையில் உடடினயாக இணையதள சேவையை தொடர உத்தரவிட வேண்டும் என்றும்,  துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடவும் கோரியுளளார்.

இந்த  முறையீட்டை பிற்பகலில் அவசர வழக்காக எடுத்து  உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.