விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கான வசனத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் நல்ல விலை கொடுக்க முன்வந்ததைத் தொடர்ந்து, ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது.