சென்னை,

டிடிவி தினகரன் நேற்று அறிவித்த 50க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் அறிவிப்புக்கு பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,

நியமிக்கப்பட்டவர்கள் அனைவருடனும் கலந்து ஆலோசித்த பிறகே பட்டியல் வெளியிடப்பட்டது என்று முன்னாள் அமைச்சரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

டிடிவி விதித்த 60 நாட்கள் கெடு நேற்றோடு முடிவடைந்த நிலையில், கட்சி தலைமை அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்து, தனது அரசியல் நிலையற்ற தன்மையை மீண்டும் உறுதிபடுத்தி உள்ளார்.

அதைத்தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை அறிவித்து பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் வெளியிடப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டிடிவியின் ஆதரவாளரான செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தற்போது பதவி வேண்டாம் என்று கூறியுள்ள சத்யா,  பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏக்களுடனும் கலந்து ஆலோசித்த பிறகே புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டதாக கூறி உள்ளார்.

கட்சியும், ஆட்சியும் முதலமைச்சர் பழனிசாமியிடம் என, அமைச்சர் ஜெயக்குமார் தவறாக பேசி வருகிறார்  என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.