சென்னை,

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் நேற்று இரவு டிடிவி தினகரன் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

அதிமுகவில் பிரிந்திருந்த ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பாதுகாப்பில் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், டிடிவி தினகரன்  எடப்பாடி அரசின் அமைச்சர்கள் சிலரையும், நிர்வாகிகள் பலரை யும் கட்சியில் இருந்து நீக்குவதாக தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.

டிடிவியின் இந்த அறிவிப்புக்கு அதிமுக தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் டிடிவி தினகரன் கொடும்பாவி எரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு சென்னையில் டிடிவி தினகரன் கொடும்பாவி எரிக்கப்பட்டது. மயிலாப்பூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் பலர் சேர்ந்து மயிலாப்பூர்  லஸ் கார்னரில் டிடிவி தினகரன் கொடும்பாவியை கொண்டு வந்து கொளுத்த முயன்றனர். அப்போது டிடிவிக்கு எதிராக  கோஷமிட்டனர்.

போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் இருந்து டிடிவி தினகரன் உருவ பொம்மையை பிடுங்கி, அவர்களை அங்கிருந்து விரட்டினர்.

இதன் காரணமாக மயிலாப்பூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.